×

எஸ்பிஜி தலைவருக்கு ஓராண்டு பணிக்காலம் நீட்டிப்பு

புதுடெல்லி: எஸ்பிஜி தலைவர் அருண்குமாரின் பணிக்காலம், ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் தலைவராக கடந்த 2016ம் ஆண்டு மார்ச் முதல் ஐபிஎஸ் அதிகாரி அருண்குமார் சின்கா இருந்து வருகிறார். இவரது பணிக்காலம் வருகிற 2020ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நியமன கமிட்டியானது, அருண்குமார் சின்காவின் பணிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க அனுமதி அளித்துள்ளது. இதன்படி 2021ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வரை எஸ்பிஜியின் தலைவராக அருண்குமார் நீடிப்பார்.

Tags : SPG , One-year,extension, SPG ,leader
× RELATED சென்னையில் நாளை மறுதினம் கேலோ...