×

நாடு முழுவதும் ரயில்வே சொத்து ரூ.80 கோடி சேதம்: வாரிய தலைவர் அறிவிப்பு

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது ரயில்வே துறைக்கு சொந்தமான ₹80 கோடி  சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பல இடங்களில் வன்முறை வெடித்தது. அப்போது சிலர் பொது சொத்துக்களை அடித்து சேதப்படுத்துதல், தீ வைத்து எரித்தல் உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

 இந்நிலையில் போராட்டத்தின்போது நாடு முழுவதும் ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று பேட்டியளித்த அவர், “சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது ரயில்வேயின்  ₹80 கோடி சொத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் ஈடுபட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து நஷ்டஈடு பெறப்படும்” என்றார்.

Tags : country , 80 crore , railway,assets, country
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...