×

எல்லை பிரச்னையில் பாஜ தலைவர்கள் மோதல்

எங்க பகுதிய எங்ககிட்ட தரலேன்னா...

மும்பை: மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்னை தொடர்பான வழக்கு நீண்டகாலமாக உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. மகாராஷ்டிராவை ஒட்டிய கர்நாடகா எல்லைப் பகுதிகளில் லட்சக்கணக்கான மராத்தி மக்கள் வசித்து வருகிறார்கள். குறிப்பாக பெல்காம் மற்றும் கார்வார் பகுதிகளில் மராத்தி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள். கடந்த சனிக்கிழமையன்று சில கன்னட அமைப்பினர் பெல்காமில் மகாராஷ்டிரா பஸ்களை வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன், கடைகளில் மராத்தி மொழியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகளை அடித்து உடைத்தனர். மகாராஷ்டிரா ஏகிகரண் சமிதி அமைப்பை சேர்ந்தவர்கள் இரு மாநில எல்லையில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் கர்நாடகா நவ நிர்மாண் சேனா என்ற கன்னட இயக்கம் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது.

இந்த நிலையில், பாஜ.வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியதாவது: மகாராஷ்டிராவுக்கு சொந்தமான பகுதிகள் கர்நாடகாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டாலோ, அநீதி இழைக்கப்பட்டாலோ மகாராஷ்டிரா மாநில பாஜ பொறுத்துக் கொள்ளாது என்பதை கர்நாடகா அரசுக்கு தெளிவாக கூற விரும்புகிறேன். இந்த பிரச்னையில் மகாராஷ்டிரா மாநில பாஜ தனது கொள்கைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மராத்தி மக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். எங்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளை எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றார்.

Tags : leaders ,BJP , BJP leaders,clash,over border,issue
× RELATED மேலிட தலைவர்களுடன் மீண்டும்...