×

மரங்கள், வனப்பகுதி அதிகரித்துள்ளது: பிரகாஷ் ஜவடேகர் பேச்சு

புதுடெல்லி: இந்தாண்டிற்கான இந்திய வனத்துறை அறிக்கையை வெளியிட்டு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று பேசியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில் மொத்தமுள்ள மரங்கள், வனப்பகுதியின் அளவு 5,188 சதுர கிலோ மீட்டர் பெருகி உள்ளது. நிலக்கரி இருப்பும் 42.6 மில்லியன் டன் அதிகரித்துள்ளது. இது கடந்த 2017ம் ஆண்டு வனத்துறை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை விட உயர்ந்துள்ளது.

இது பாரீஸ் பருவநிலை ஒப்பந்த இலக்கினை இந்தியா எட்டும் என்ற தன்னம்பிக்கையை அளிக்கிறது. அசாம், திரிபுரா தவிர, அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் சேர்த்து 765 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி அதிகரித்துள்ளது. இதே போல், சதுப்பு நிலக்காடும் கடந்த அறிக்கையுடன் ஒப்பிடுகையில் 54 சதுர கிலோ மீட்டர் பெருகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Forests , Trees, Forests,Increased, Prakash Javadekar,talk
× RELATED மழலைச் செல்வமருளும் அரச மர பிரதட்சணம்