×

திருக்கனூர் அருகே வெளியூருக்கு கடத்துவதற்காக குவிக்கப்பட்ட மணல் பறிமுதல்

திருக்கனூர்: திருக்கனூர் அருகே வெளியூருக்கு கடத்துவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை அரசு அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். திருக்கனூர், காட்டேரிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதிகளில் உள்ள சங்கராபரணி ஆற்றில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளப்பட்டு, தனியார் நிலங்களில் கொட்டி வைத்து, பின்னர் லாரிகள் மூலம் வெளியூருக்கு கடத்தப்படுவதாக காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருக்கனூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், காட்டேரிக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் பீட் ஆபிசர்கள் விரைந்து சென்று அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தேத்தாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் மணல் குவித்து வைத்திருந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த் துறையினர் மூலம் அந்த மணல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இட உரிமையாளர்களிடம் உரிய அனுமதியின்றி மணலை குவித்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags : kidnapping ,Thirukannur , Sand
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது