×

மின்கம்பம் உடைந்து விழும் அபாயம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பண்ருட்டி: பண்ருட்டி நகரில் நான்குமுனை சந்திப்பு முக்கியமான சந்திப்பாகும். இந்த சந்திப்பு சென்னை- கும்பகோணம் சாலை, கடலூர் சாலை, சேலம் சாலை ஆகிய சாலைகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இதனால் இந்த இடத்தில் எப்போதும் கூட்டம் நெரிசல் காணப்படும். நான்குமுனை சந்திப்பில் கும்பகோணம் சாலையோரத்தில் சிமெண்ட் கட்டை மின்கம்பம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த மின் கம்பம் முழுவதும் உடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

மேலும் இந்த மின் கம்பம் அருகில் நடைபாதை இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூராக சுவிட்ச் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. மின்வயர்களும் வெளியே தெரிகின்றன. இதனால் மழைக்காலங்களில் மின் கசிவு ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் செல்கின்றனர். குழந்தைகள் யாராவது இதனை தெரியாமல் தொட்டு விட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த உடைந்த மின் கம்பத்தால் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு உடனடியாக மாற்றுமின் கம்பம் நட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Electric pole
× RELATED மது பாட்டில்களை திரும்ப பெறும்...