×

சிறுவாச்சூரில் கிடப்பில் போடப்பட்ட தரைவழி மேம்பாலம் கட்டும் பணி 19 மாதங்கள் கழித்து துவங்கியது: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூர்: சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலை தரைவழி மேம்பால கட்டு மானப் பணி. அடிக்கல் நாட்டி, கிடப்பில் போடப் பட்டுக் கிடந்தது, 19மாதம் கழித்து தொடங்கி நடக்கிறது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ரூ.13.03 கோடி மதிப்பீட்டில் தரைவழி மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு மே மாதம் 14ம்தேதி நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் திட்ட இயக்குனர் சங்கர சுப்பிரமணியன், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி எம்பி மருதராஜா, பெரம்ப லூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஆகியோர் முன்னிலையில், மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, சிறுவாச்சூர் தரைவழி மேம்பாலம் அமைப்பதற்கான திட்டத் திற்கு, அடிக்கல் நாட்டி வைத்தார்.

அப்போது பொன் ராதாகிருஷ்ணன் பேசும்போது, நாட்டின் மொத்த பயணிகள் போக்குவரத்தில், 80 சதவீத போக்குவரத்தும், மொத்த சரக்கு போக்குவரத்தில் 65 சதவீத சரக்கு போக்குவரத்தும், 2 சதவீத தேசியநெடுஞ்சாலையில்தான் நடந்து வருகிறது. இந்த சாலை வசதியை 2 மடங்காக உயர்த்த வேண்டும் என்பதே இந்த துறையின் அமைச்சர் நிதின்கட்கரிக்கு, பிரதமர் மோடி அறிவித்த இலக்காகும். அதோடு தேசிய நெடுஞ்சாலைகளின் தர த்தை உயர்த்தவேண்டும், விபத்துகளின் எண்ணிக் கையைக் குறைக்க வேண் டும், உலகத்தில் தலை சிற ந்த சாலைப் போக்கு வரத் தாக, இந்திய சாலைப் போக்குவரத்து திகழ வேண்டும் என்றார். ஆனால் விழா முடிந்தவுடன் சர்வீ ஸ் சாலைகள் அமைத்ததுடன் கிடப்பில் போடப்பட்ட பணிகள், ஒன்றரை ஆண்டுகள் கடந்து, அதாவது 19 மாதங்களுக்குப் பிறகு தற்போது தொடங்கி நடந்து வருகிறது. சிறுவாச்சூர் பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்த விபத்துகளில் கடந்த 2015, 2016, 2017 ஆகிய 3 ஆண்டுகளில் 10 பேர் இறந்துள்ளனர். 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

10க்கும் மேற்பட்ட சாலை மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. இந்த 3 ஆண்டு கணக்கெடுப்பின் அடிப்படையில் தான், இப்பகுதி “பிளாக் ஸ்பாட்” என அறிவிக்கப்பட்டு, தரைவழி மேம்பா லம் அமைக்கப்படுகிறது. 12 மீட்டர் அகலம், 5.50 மீட்டர் உயரம், வடக்கே 161. 30 மீட்டர் நீளம், தெற்கே 355.95 மீட்டர் மற்றும் 402.56 மீட்டர் நீளமும் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல், கிடப்பில் போடப்பட்ட பணி களால் மேலும் விபத்து எண்ணிக்கைகளும், உயிர்ப்பலி எண்ணிக்கைகளும் அதிகரிக்கும் முன்பாக தரைவழி மேம்பாலகட்டுமானப்பணி களைத் தடையின்றி கட்டி முடித்து பல உயிர்களைக் காக்கதேசியநெடுஞ்சாலை கள் ஆணையம் முன்வர வேண்டுமென தினகரன் நாளிதழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. இதனையே விவசாய சங்கங் களும், சமூகஆர்வலர்களும், சிறுவாச்சூர், அய்யலூர் கிராமப் பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் 19 மாதங்களுக்குமுன்பு அடிக்கல் நா ட்டப்பட்டு, சர்வீஸ் சாலை அமைக்கப் பட்டதோடு கிடப் பில் போடப்பட்ட பணிகள், தற்போதுதான் தொடங்கி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணிகளையாவது எந்தவித காரணங்களையும் தடை யாக காட்டாமல், விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : completion ,Chilawachur ,ground-floor bridge ,Chiravachar , Chiruvachur, Ground Floor
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா