×

பனவெளி வெண்ணாற்றங்கரையில் குண்டும், குழியுமாக மாறிய சாலை: புதிதாக அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சை: தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் இருந்து பனவெளி- தென்பெரம்பூர் செல்லும் வெண்ணாற்றங்கரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை புதிதாக அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். தஞ்சை அருகே பனவெளி, வெண்ணாற்றங்கரை சாலை வழியாக பனவெளி, தென்பெரம்பூர், அரசகுடி, அள்ளூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லலாம். மேலும் நகரத்துக்குள் வராமல் பைபாஸ் சாலைக்கு செல்லும் வழியாகவும் இருந்து வருகிறது. இந்த சாலையை 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 2006ம் ஆண்டு பள்ளியக்ரஹாரம்- பனவெளி- தென்பெரம்பூர், வெண்ணாற்றங்கரை சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது.

தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், இரவு நேரங்களில் வெண்ணாற்றில் இருந்து லாரிகளில் மணல் கடத்தல் செய்வதற்காக இந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்காமல் உள்ளனர். சேதமடைந்த சாலையால் வாகனங்களை இயக்க முடியாததால் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பொதுமக்கள் தஞ்சைக்கு செல்கின்றனர். எனவே உள்ளாட்சி தேர்தல் முடிவு வந்தவுடன் பள்ளியக்ரஹாரம்- பனவெளி, தென்பெரம்பூர் சாலையில் புதிய தார் சாலைகளை அமைத்து தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : road ,public , Panveli Butterfly, Road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...