×

ஆரணி ஒன்றியத்தில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்

ஆரணி: ஆரணி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணும் மையமான ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரிகள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப் பெட்டிகளை  பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாட்டத்தில் 2வது கட்டமாக ஆரணி, மேற்கு ஆரணி, போளூர், கலசபாக்கம், செங்கம், சேத்துப்பட்டு, வந்தவாசி, ஜவ்வாதுமலை, புதுப்பாளையம் ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இதில், 1,590 வாக்குச்சாவடி மையங்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து லாரிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குபெட்டிகள், வாக்கு சீட்டுகள், மை போன்ற பொருட்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர் உள்ளிட்டவை நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 354 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் சீனிவாசன் ஆய்வு செய்தார். இந்நிலையில், ஆரணி, மேற்கு ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமான ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரிகள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் முடிந்தவுடன் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து கொண்டுவரும்  வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகளில் ஊழியர்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags : keeping ,Arany Union , Arranges, ballot boxes, arrangements intensified
× RELATED கோழிக்கோடு நிகழ்ச்சியில்‘பாரத் மாதா...