×

திருவண்ணாமலையில் ஏர்ஹாரன் ஒலிக்க தடை விதிக்கப்படுமா?... ஆன்மிகவாதிகள் எதிர்பார்ப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏர்ஹாரன் ஒலிக்க தடை விதிக்க வேண்டும் என ஆன்மிகவாதிகள் எதிர்பார்க்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகராக திகழ்கிறது திருவண்ணாமலை. இந்நகரில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசிக்க தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். இதுதவிர ஒவ்வொரு பவுர்ணமியன்றும் திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்களும், தீபத்தின் போது சுமார் 25 லட்சம் பக்தர்களும் கிரிவலம் செல்கிறார்கள். நாளுக்கு நாள் திருவண்ணாமலையின் புகழ் பெருகி வருகிறது. இந்நகருக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இவ்வாறு வரும் வாகனங்களில் ஏர்ஹாரன் பயன்படுத்தப்படுகிறது. நகருக்குள் ஏர்ஹாரன் பயன்படுத்தக் கூடாது.

ஆனால் திருவண்ணாமலையில் பெரும்பாலான நான்கு சக்கர வாகனங்களில் ஏர்ஹாரன் பயன்படுத்துகின்றனர். இது கிரிவலம் வரும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. ஏர்ஹாரன் பயன்படுத்தும் வாகனங்களை முன்பெல்லாம் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். ஏர்ஹாரனையும் பறிமுதல் செய்வார்கள். ஆனால் ஏனோ இப்போதெல்லாம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஏர்ஹாரனையும் பறிமுதல் செய்வதில்லை. இதனால் திருவண்ணாமலை நகரில் நான்கு சக்கர வாகனங்களில் ஏர்ஹாரன் பயன்பாடு அதிகரித்து விட்டது. அமைதியை தேடி பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். ஆனால் திருவண்ணாமலையில் ஏர்ஹாரன் ெதால்ைலயால் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதில் போலீசாரோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ தக்க நடவடிக்கை எடுப்பதில்லை.

 எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இனிமேலாவது இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஏர்ஹாரனை திருவண்ணாமலை நகருக்குள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அதை மீறி ஏர்ஹாரனை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர்ஹாரனை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே ஆன்மிகவாதிகளின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Air Thorn Prohibition ,Thiruvannamalai ,Spiritualists , Thiruvannamalai, Airharan,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...