×

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2% அதிகம் பதிவாகி உள்ளது : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, எண்ணூர், சென்னையின் டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழையும் சென்னையில் 3 செ.மீ. மழையும். திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 2 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 2% அதிகம் பதிவாகி உள்ளது. 44 செ.மீ. பதில் 45 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.   

மாலத்தீவு மற்றும் அதையொட்டிய லட்சத் தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக உருமாறி உள்ளதாகவும் இதனால் சென்னையில் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமான வெப்பநிலை 30 டிகிரி செல்ஷியஸும் குறைந்தபட்சமான வெப்பநிலை 23 டிகிரி செல்ஷியஸும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Maldives , Meteorological Center, Rainfall, Temperature, Lakshadweep
× RELATED நாடாளுமன்ற தேர்தல் மாலத்தீவில் ஆளும்...