×

கேப்ஸ்யூல் வீடு

நன்றி குங்குமம் முத்தாரம்

ஓரிடத்தில் இருந்து இன்னொரு  இடத்துக்குச் சுலபமாக தூக்கிச் செல்லக்கூடிய அழகான வீட்டை வடிவமைத் திருக்கிறார்கள் ஸ்லோவாக்கியாவின் கட்டடக் கலைஞர்கள். பனிமனிதர்களின் இருப்பிடமான இக்ளூவைப் போல காட்சியளிக்கும் இந்த வீடு 14.7 அடி நீளமும், 7.9 அடி அகலமும் கொண்டது. இவ்வளவு சிறிய வீட்டில் படுக்கக் கூட முடியாதே என்று கேட்பீர்கள். ஆனால், இரண்டு பேர் இதில் தாராளமாக வசிக்க முடியும். அந்தளவுக்கு இதில் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு கிச்சன், சாப்பிடுவதற்கு தனியாக ஒரு டைனிங் பகுதி, ஒரு டாய்லெட், குளிப்பதற்கு ஒரு வெந்நீர் ஷவர், துணிமணிகள் வைக்க ஓர் இடம் என எல்லா வசதிகளும் இதனுள் இருக்கின்றன.

தவிர, மழை நீர் சேகரிப்பு வசதியும் உள்ளது. அதனால் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு நொடி கூட இடைவெளியில்லாமல் குளிர்சாதனப் பெட்டி இயங்கும் இந்த வீடு தனக்குத் தேவையான மின்சாரத்தை தானே உருவாக்கிக்கொள்கிறது. ஆம்; வெயிலடிக்கும் இடத்தில் சூரிய சக்தி மூலமும், காற்றடிக்கும் இடத்தில்  குட்டி காற்றாலை மூலமும் இது தனது பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும். ‘கரண்ட் ஆஃப்’ என்ற பேச்சுக்கு இடமில்லை. கேப்ஸ்யூல் வடிவில் இருப்பதாலும், இயற்கைக்கு உகந்ததாக உள்ளதாலும் ‘ஈக்கோகேப்ஸ்யூல்’ வீடு என்று இதனை அழைக்கின்றனர்.

Tags : Capsule house , Capsule house
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்