×

விஸ்டன் டி20 கனவு அணி; தோனி 'நோ'; கோலி, பும்ராவுக்கு இடம்; கேப்டனாக ஆரோன் பிஞ்ச்

லண்டன்: கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி அசத்தியது யார்? என்பதை விஸ்டன் இதழ் பல்வேறு புள்ளி விவரங்களுடன் அலசி ஆராய்ந்து கனவு அணியாக வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது டி20 அணி வீரர்கள் பட்டியலை விஸ்டன் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியில் 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு இடம் கிடைத்துள்ளது. கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனிக்கும், ஹிட் மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மாவுக்கும் விஸ்டன் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. விஸ்டனின் சிறந்த டி20 அணிக்கு கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.

விஸ்டன் டி20 கனவு அணி:

ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), காலின் முன்ரோ, விராட் கோலி, ஷேன் வாட்ஸன், கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ் பட்லர், முகமது நபி, டேவிட் வில்லே, ராஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா.

விஸ்டனில் இடம் பிடிக்காத நாடுகள்

பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள், வங்கதேசம் ஆகிய அணிகளில் இருந்து ஒரு வீரரும் கனவு அணியில் தேர்வு செய்யப்படவில்லை. நியூஸிலாந்து அணியில் இருந்து காலின் முன்ரோ மட்டுமே தொடக்க ஆட்டக்காரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Tags : Whiston T20 Dream Team ,Jasprit Bumrah ,Virat Kohli ,Aaron Finch ,team ,T20I ,Wisden , Virat Kohli, Jasprit Bumrah in Wisden's T20I team of the decade
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...