×

மாய உலகில் பிள்ளை வளர்ப்புக்கு ஒரு உதாரணம்: தக்கச் சான்றாக கூலித் தொழிலாளியின் குடும்பம்

திருவண்ணாமலை:  அவசர உலகில் உற்றார் உறவினரையே மறந்துவிடும் பலருக்கு பொது விஷயங்களியில் நாட்டம் செலுத்த எங்கே நேரம் உள்ளது.  பெரியவர்கள்தான் இப்படி ஏதோ ஒரு நோக்கத்தில் ஓடி விடுகிறார்கள் என்றால் எந்த ஒரு ஆதாயமுமின்றி இன்றைய சின்னஞ்சிறு பிள்ளைகள் செல்போன்களில் தங்களது வாழ்நாள்களை கடத்தி வருகின்றனர்.  அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பாடமே இந்த செய்தி தொகுப்பு .  திருவண்ணாமலை தாமரை நகருக்கு பெருமையை ஏற்படுத்தி வருகிறது இந்த வீடு. சிலை அலங்கார தொழிலாளர் செந்தில் குமார் மற்றும் அவரது மனைவி ரத்தினாவின் பிள்ளை வளர்ப்பே இதற்கு காரணம். வேலைக்கு சென்ற அப்பா எப்போது வருவார் அவரது செல்போனை எப்படி எடுத்து விளையாடலாம் என்றே இன்றைய பிள்ளைகளின் நாட்டம், ஆர்வம், ஏக்கம், எதிர்பார்ப்பு. 

அப்படிப்பட்டவர்களின் மத்தியில் திவ்யா, கமலேஷ் என்ற இந்த குழந்தைகளோ தினம் ஒரு குறல், தினம் ஒரு தகவல் அன்றாடம் அந்த நாளின் சிறப்பு என்ன என்பதை தங்களது வீட்டின் முன்பு கரும்பலகையில் எழுதி ஊர் அறிய செய்கின்றனர்.  ரத்தினாவின் பிள்ளை வளர்ப்பை பார்க்கும் போது எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணியில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் தான் நம் நினைவிற்கு வருகிறது. செந்தில் குமாரின் குழந்தைகளின் செயல்களை கண்டு அக்கம் பக்கத்தினர் பொறாமைப் படுகிறார்களோ இல்லையோ, பெருமைப்படத்  தவறவில்லை.  மாயங்கள் நிறைந்த இந்த உலகில் திவ்யா, காமலேஷைப் போல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தால் எல்லாக்குழந்தைகளும் நல்லக்குழந்தைகளே, அவர்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் உற்றவர்களே.


Tags : child-rearing ,world ,wage laborer , The world of magic, child-rearing, example, mercenary, family
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...