×

ரோலர் ஸ்கேட்டிங் மைதானமின்றி மாணவ, மாணவிகள் பரிதவிப்பு: திருச்சி சாலைகளில் ஆபத்தான முறையில் பயிற்சி

திருச்சி: ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் இல்லாமல் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் திருச்சி சாலைகளில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முழுவதும் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு பயிற்சி செய்வதற்கு மாணவர்களுக்கு போதிய இட வசதி அமைத்து தரப்பட்டுள்ளது. ஆனால் திருச்சியில் மற்ற அனைத்து விளையாட்டுக்களுக்கும், அண்ணா ஸ்டேடியம் மற்றும் தனியார் பள்ளிகளில் போதுமான வசதி உள்ளது. திருச்சி மாநகரத்தில் ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டை வியாபார நோக்கில் ஸ்கேட்டிங் பயிற்சி கொடுக்கிறார்கள். வசதியில்லாத, திறமையுள்ள மாணவ, மாணவிகள் வெவ்வேறு பள்ளிகளில் படிப்பதால் இந்த விளையாட்டை முறையாக பயிற்சி செய்ய முடியவில்லை.

பெரம்பலூர், திருப்பூர், கோவை, மதுரை, சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி செய்வதற்கு அரசு சார்பில் இட வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழகத்தின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் முறையாக பயிற்சி செய்வதற்கு எந்த விதமான இடமும் மாநகராட்சி சார்பில் அமைத்து தரப்படவில்லை. தமிழகத்தில் மற்ற ஊர்களில் பயிற்சி செயயும் மாணவர்களிடம் திருச்சி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு முறையான பயிற்சி இல்லாத காரணத்தினால் மாநில அளவில் போட்டி போட்டு மாணவர்களால் வெற்றி பெற முடியவில்லை. உடனடியாக அரசு சார்பில் திருச்சியில் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி செய்ய போதிய மைதான வசதி செய்து தர வேண்டும். அரசு சார்பில் ரோலர் ஸ்கேட்டிங் செய்ய பயிற்சியாளர் அமைக்க வேண்டும்.

பயிற்சியாளர் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் அதிக பணம் செலவு செய்து தங்கள் குழந்தைகளின் திறமையை வெளிக்காட்ட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டின் செயலாளராக பதவி வகித்து வருபவர் தனியார் பயிற்சி மையம் நடத்தி வருவதால்தான் அரசு சார்பில் மையம் அமைப்பை தடுத்து வருவதாக மாணவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம் அருகில் அதிக வாகனங்கள் செல்லக் கூடிய இடத்தில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு இன்றி தினந்தோறும் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்து வருகின்றனர். எனவே திருச்சி ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் அமைத்து தர வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்பாக உள்ளது.


Tags : roads ,Trichy , Roller Skating Ground
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...