×

நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது: ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லி: பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தார். கடந்த 50 ஆண்டுகளாக இந்தி சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு (77) நாட்டின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே  விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா கடந்த திங்களன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர், நடிகைகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஆனால், அமிதாப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால், விழாவில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்த சிறப்பு விழாவில், அமிதாப் பச்சனுக்கு ஜனாதிபதி விருது வழங்குவார் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்படி, நேற்று இந்த விழா நடைபெற்றது. அதில், அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். அவருக்கு தங்கத் தாமரை பதக்கமும்,  ரூ.10 லட்சம் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் பேசிய அமிதாப் பச்சன், “கடவுள் எனக்கு கருணை காட்டியுள்ளார். இந்திய ரசிகர்களின் நிலையான அன்புக்கும், ஊக்கத்துக்கும் என்றும் கடன்பட்டுள்ளேன். நான் இங்கே நிற்பதற்கு அதுதான் காரணம். நான் இன்னும் முடிக்க வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது,” என்றார். இவர் ஏற்கனவே 1984ல் பத்ம விருது, 2001ல் பத்ம பூஷண், 2015ல் பத்ம விபூஷண் விருதுகளை பெற்றுள்ளார்.


Tags : Amitabh Bachchan ,President , Actor Amitabh Bachchan , presented , Dada Saheb Phalke Award , President
× RELATED இந்தியா கூட்டணியால்தான் பாதுகாப்பான...