×

மபி.யில் பகுஜன் சமாஜ் பெண் எம்எல்ஏ நீக்கம்

போபால்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பெண் எம்எல்ஏ.வை மாயாவதி அதிரடியாக நீக்கியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என கூறி வருவதோடு, நாடாளுமன்றத்தில் இதை எதிர்த்தும் பகுஜன் சமாஜ் வாக்களித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், தாமோ மாவட்டத்தில் உள்ள பதேரியாவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் கலந்து கொண்டார். இது தனது சட்டப்பேரவை தொகுதி என்பதால், இந்நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் பெண் எம்எல்ஏ.வான ராமாபாயும் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இதனால் கோபமடைந்த மாயாவதி, ராமாபாயை நேற்று கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.


Tags : MLA ,Mabi ,Bhagwan Samaj , Mabi, Bhagwan Samaj, female MLA, dismissal
× RELATED மனைவி காங். எம்எல்ஏ என்பதால் வீட்டை...