×

‘பாரத் மாதா கி ஜே’ என கூறுபவர்கள் மட்டும் இந்தியாவில் வசிக்கலாம்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சர்ச்சை பேச்சு

புனே: ‘பாரத் மாதா கி ஜே’ என கூறுபவர்கள் மட்டும் இந்தியாவில் வாழலாம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மாணவர் அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது; யார் வேண்டுமானாலும் வந்து தங்கியிருக்க இந்தியா ஒன்றும் சத்திரமல்ல. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் இந்த நாட்டின் நலனுக்கு எதிரானவர்கள்.

பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அப்படி கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கிய இந்திய நாட்டை, யார் வேண்டுமானாலும் வந்து சுதந்திரமாக நடமாடும் தர்ம சத்திரமாக மாற்றப் போகிறோமா நாம்?. அதனால், தற்போது நமக்கு முன் எழுந்துள்ள சவால்களை நாம் எதிர்கொண்டாக வேண்டும். பாரத் மாதா கி ஜே என்று கூறுபவர்கள் மட்டும் இந்தியாவில் வாழ்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Dharmendra Pradhan ,India , 'Bharat Mata Ki Jai', India, Residence, Union Minister
× RELATED லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியில்...