×

விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு விமானி சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை: இயந்திர கோளாறை உரிய நேரத்தில் கண்டுபிடித்த விமானியின் சாமர்த்தியத்தால் 183 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 4.05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 177 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட 183 பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் இருந்து பறக்க தயாரானது. விமானம் பறக்க தொடங்குவதற்கு முன்னதாக  விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. உடனே விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து விமான நிலைய கட்டுப்பட்டு அறையில் இருந்து விமானத்தை இயக்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இடத்திற்கே இழுவை வண்டி மூலமாக நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு விமான பொறியாளர்கள் விமானத்தில் ஏறி பழுதுபார்த்தனர். மிகச்சிறிய இயந்திரக் கோளாறு தான் என்பதால் பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்படவில்லை. பழுது பார்க்கும் பணி நடந்தது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டுபிடித்து துரித நடவடிக்கை எடுத்ததால் 183 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Tags : Passengers ,pilot , Sudden, mechanical malfunctions , plane, pilot's skill, passengers, survived
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...