×

விவசாயத்திற்கு மின் இணைப்புகளை அதிகரிக்க வேண்டும்: தமாகா கோரிக்கை

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் சுமார் 2 லட்சம் விவசாயிகள் விவசாயத்திற்கு இலவசமாக மின் இணைப்புகளை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் மின்வாரியம் இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக மின் இணைப்பு வழங்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக மின்வாரியம் விவசாய மின் இணைப்பு சம்பந்தமாக விவசாயிகளுக்கு மேலும் பயன் அளிக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Tags : Tamaka , Agriculture, power supply, increase, tamaka, demand
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...