×

மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 2,817 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 2,114 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 118.83 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 118.79 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 91.55 டிஎம்சி. இதனிடையே, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக நீடித்தது.

Tags : Mettur Dam , Mettur Dam, water level, slope
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு