விசா இன்றி இந்தியா வந்த வங்கதேச வாலிபர் ஈரோட்டில் சிக்கினார்

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் ரயில்களில் சோதனை நடத்தினர். குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது சந்தேகப்படும்படியாக இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வங்கதேச நாட்டை சேர்ந்த  உஜ்ஜல்குமார் டாடா(29) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் பாஸ்போர்ட், விசா போன்ற எவ்வித ஆவணங்கள் இன்றி வந்துள்ளார். இதையடுத்து ரயில்வே போலீசார் உஜ்ஜல்குமார் டாடாவை ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, உஜ்ஜல்குமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுபடி உஜ்ஜல்குமார் டாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>