×

அவதூறு பரப்புவதாக திருநங்கை அப்சரா போலீசில் புகார் டி.வி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கைது

சென்னை: திருநங்கை அப்சார மகளிர் போலீசில் கொடுத்த புகாரில் போரில், சக டி.வி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை மகளிர் போலீசார் கைது செய்தனர். சென்னை ஈஞ்சம்பாக்கம், சேஷாத்ரி அவென்யூவை சேர்ந்தவர் அப்சரா (25). இவர் திருநங்கை. இவர், வியாசர்பாடியை சேர்ந்த ஜோ மைக்கேல் (31) என்பவருடன் சேர்ந்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்துள்ளார். தற்போது, அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாகப் பிரிந்து தற்போது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், அப்சரா குறித்து மைக்கேல் தரக்குறைவாக தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக அப்சரா அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 9ம் தேதி புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோ  மைக்கேலை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று தி.நகர்   பகுதிக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்து. அங்கு சென்ற போலீசார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோ மைக்கேலை கைது செய்து  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : TV show coordinator ,Apsara ,defamation TV program coordinator , TV program,coordinator,arrested , transgender Apsara police,slander
× RELATED யூடியூபருக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது ஐகோர்ட் உத்தரவு