×

வரியை அதிகரித்தால் விற்பனையும் சரியும்: அறிவழகன், பொருளாதார நிபுணர்

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு சேவை வரியை முறையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. குறிப்பாக, வணிகர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்வதும், ரிட்டன் தாக்கல் செய்யவும் சிரமப்படுகின்றனர். கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் தான் இந்த சரக்கு சேவை வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 20 சதவீதம் பேர் தான் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்கின்றனர். பலர் தாக்கல் செய்வதில்லை. அதனால் ஜிஎஸ்டி வசூல் ஆகாமல் கூட உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வரி அடுக்குகள் தான்; ஒரே நாடு ஒரே வரி என்று தான் ஜிஎஸ்டி வரியை ஆரம்பித்தார்கள்; ஆனால் அது நடக்கவில்லை;  பலநாடுகளுக்கு நான் சென்றுள்ளேன். கம்போடியா, வியாட்நாம், சிங்கப்பூர், மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளேன். அனைத்து நாடுகளிலும் ஒரே நாடு ஒரே வரி தான். டிவி, எலக்ட்ரானிக் என எந்த பொருட்களை எடுத்தாலும் ஒரே வரி தான் 7 சதவீதம். அதுதான் முன்பு சொன்னது; ஆனால், அரசு  பல அடுக்கு வரி போட்டதுடன், முரண்பாடுகளும் ஏற்பட காரணமாகி விட்டது.

 இப்போது பிரிட்ஜ், ஏசி, கார் இல்லாத வீடுகள் இல்லை இப்போது 28 சதவீதம் என்றால் யார் வாங்குவார்கள். நானே பிரிட்ஜ் வாங்கினேன் ரூ.20 ஆயிரம் என்றார்கள்;  பில் போட்ட பிறகு ரூ.25 ஆயிரம் என்றார்கள். அதன்பிறகு பார்த்தால் ரூ.26ஆயிரம் ரூ.20 ஆயிரத்துக்கு ரூ.6 ஆயிரம் வரி இப்படி இருந்தால் எப்படி வாங்குவது? இப்படி இருக்கும் போது விற்பனை எப்படி இருக்கும். ஒரு வீடு, கார், பிரிட்ஜ், ஏசி வைத்திருப்பவர்களுக்கு சொகுசாக இருப்பவர்கள் என்பது கிடையாது அதுக்கு ஜிஎஸ்டி வரிவிதிக்கக் கூடாது. அப்படி இருப்பின் மக்கள் ஆசையாக வாங்குவார்கள்.2 கார், வீடு வைத்திருப்பதற்கு ஜிஎஸ்டி விதிக்கலாம். நீங்கள் நினைக்கும் பொருட்கள் எல்லாம் சொகுசான பொருட்கள் இல்லை. மக்கள் அதிக அளவில் வாங்கும் பொருட்களுக்கு வரி விதிக்காமல் இருப்பது நல்லது. 2, 3 கார் வைத்திருப்பவர்கள் வருமானம் வருகிறது என்றால், அதற்கு வரி விதிக்கலாம். முதலில் வருமானம் வர வேண்டும் என்றால் வரி குறைத்தால் விற்பனை அதிகமாகும். விற்பனை அதிகமானால் அதில் உள்ள மறைமுக வரி அதிகமாகும், பொருட்கள் வாங்குபவர்கள் வரி கட்டி தான் வாங்க வேண்டும். மக்கள் கட்டும் வரி பூஜ்யமாக்கினால் அனைவரும்  கார், பைக் வாங்குவார்கள் அப்போது தான் வருமானம் அதிகமாகும்.

1300 சரக்குகளை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வந்துள்ளனர், 500 சேவை வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்துள்ளார்கள். ஜிஎஸ்டி என்பது சரக்கு சேவை வரி ஆகும். இந்த 1300 சரக்குகளை தவிர 4000 சரக்குகளுக்கு மேல் வரி இல்லாமல்  உள்ளது. அது அத்தியாவசியமாக பயன்படுத்துகிற பொருட்கள். எனவே அதற்கு 18,20 சதவீதம் வரி விதிப்பதற்கு பதிலாக 5 சதவீதம் போடலாம். நம்முடைய நாட்டில் பொறுப்பாக வரி செலுத்துபவர்கள், கம்பெனி நடத்துபவர்கள் 10 சதவீதம் கூட இல்லை. இவர்களுக்கு வங்கி கணக்குகள் இருப்பதால் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். 90 சதவீதம் மக்கள் வரி இல்லாமல் 10 சதவீதம் பொறுப்பாக வரி ெசலுத்துபவர்களுக்கு கூடுதலாக வரி செலுத்த வேண்டியுள்ளது. ஒவ் வொரு குடிமகனும் குறைந்தபட்ச வரி கட்ட வேண்டும். மாறாக, வரியை 18,20 சதவீதம் அதிகரிக்க வேண்டியதில்லை. ஜிஎஸ்டியில் உள்ள சில பொருட்கள் ஜீரோ வரியில் இருக்கும் சிலவற்றை உள்ளே கொண்டு வரவேண்டும்.

நேரடியாக வரி கட்டுபவர்களில் விவசாயம் மற்றும் வருடத்திற்கு ரூ.2.5 லட்சம் சம்பாதிப்பவர்கள் வருடத்திற்கு ரூ.10 ஆயிரம் கட்ட சொன்னால் வருமானம் வந்து கொட்டும். அப்படி கொண்டு வரும் பட்சத்தில் ரூ.4 லட்சம் கோடி வரை கூடுதலாக வருவாய் ஈட்ட முடியும். மக்கள் அதிக அளவில் வாங்கும் பொருட்களுக்கு வரி விதிக்காமல் இருப்பது நல்லது. 2, 3 கார் வைத்திருப்பவர்கள் வருமானம் வருகிறது என்றால், அதற்கு வரி விதிக்கலாம்.

Tags : economist , Increasing ,tax will cause ,sales,fall, intellectual, economist
× RELATED பொருளாதார நிபுணர் ஆனந்த்...