×

சுற்றுலா பொருட்காட்சியில் மக்களை கவரும் பாம்பன் பாலம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சி தெற்கு ரயில்வே அரங்கில் வைக்கப்பட்டிருக்கும் பாம்பன் பாலம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தெற்கு ரயில்வே அரங்கில் பாரம்பரியம் மற்றும் புதுமையான ரயில் கோச் வகைகள் நீராடி மற்றும் எலக்ட்ரிக் என்ஜின்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாம்பன் பாலம் மற்றும் அதில் ரயில்கள் இயக்கும் முறை; கப்பல் பயணிக்கும் முறை குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மலை ரயில், கோல்டன்ராக் தொழிற்சாலை செயல்பாடுகள் குறித்த காட்சி சிறுவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரயில்வேயின் முன்னேற்றங்கள் குறித்த விபரங்களும் வரைபடங்களாக விளக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அரங்கை பார்வையிட்டனர்.


அனைத்து தரப்பினரையும் முடக்கிப்போட்டுள்ள ஜிஎஸ்டி குளறுபடிக்கு முடிவே இல்லையா?: தீர்வில்லாமல் தவிக்கின்றனர் சிறு, குறு வியாபாரிகள்
மாநிலங்களில் ஒவ்வொரு பொருட்களுக்கும் வரிகள் போடப்பட்டதை மாற்றி, மத்திய, மாநில வரிகளை சேர்த்து சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) முறையை பாஜ அரசு அமல்படுத்தியது. கடந்த 2017ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நான்கு அடுக்குகளாக 5 முதல் 18 சதவீதம் வரை வரிகள் போடப்பட்டன. பல முறை மாநிலங்களுடன் பேசியபின், வரிகள் மாற்றி அமைக்கப்பட்டன. எந்த ஒரு சிறு, குறு வியாபாரிகள் கூட ஜிஎஸ்டியில் இருந்து தப்ப முடியாது; அதுபோல பெரிய நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரியை கட்டி அறிக்கையை தாக்கல் செய்தாக வேண்டும். ஆனால், ஒரு தரப்பினர் ஒழுங்காக வரியை கட்டி வருகின்றனர்.இன்னொரு தரப்பினர், மக்களிடம் வாங்கும் வரியை கட்டாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வந்தனர். மக்களுக்கோ வழக்கம் ேபால தலைவலி தான்.

சாதாரண 5 ரூபாய் பிஸ்கெட் வாங்கினாலும் சரி, வார இறுதியில் ஓட்டலுக்கு போனாலும் சரி ஜிஎஸ்டி வரியை பில்லில் பார்த்தால் தலை சுற்றி விடும். எந்த ஒரு பொருளை வாங்கினாலும், ஜிஎஸ்டி வரியால் பலருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏறியிருக்கும். அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களும், சிறு, குறு வியாபாரிகளும் தான். இதோ இதுவரை ஜிஎஸ்டி வரி வருவாய் மத்திய அரசுக்கு போதுமான அளவில் கிடைக்கவில்லை. மாநிலங்களுக்கும் பங்கு வரி வருவாயை அளிக்க  முடியவில்லை. பெரிய நிறுவனங்கள் கட்டிய அட்வான்ஸ் ஜிஎஸ்டி வரி தொகையும் திரும்ப கிடைக்காத நிலை காணப்படுகிறது. மாநிலங்களுக்கு ஏதோ ஓரளவு ஜிஎஸ்டி வரி வருவாய் பங்குத் தொகையை அளித்தாலும் இன்னமும் 69 ஆயிரம்  கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது மத்திய அரசு. இப்படி சிறு, குறு வியாபாரிகளையும், பெரிய நிறுவனங்களையும், பொது மக்களையும் முடக்கிப்போட்டுள்ள ஜிஎஸ்டி வரி குளறுபடிகளுக்கு முடிவு தான் எப்போது என்ற கேள்வி பலரின் மனதிலும் புரியாத குழப்பமாக தொடர்கிறது. இதோ நான்கு கோணங்களில் ஒரு அலசல்

Tags : Pamban Bridge ,tourist attraction , Pamban Bridge, a tourist.attraction
× RELATED பாம்பன் பாலத்தை கடந்த 2 படகுகள் பாறைகளில் சிக்கியதால் பரபரப்பு