×

கிண்டி பாம்பு பண்ணையில் மலைக்க வைக்கும் வெள்ளை நிற மலைப்பாம்பை மக்கள் பார்வையிடலாம்: செவ்வாய்கிழமையும் திறந்து இருக்கும் என அதிகாரிகள் தகவல்

சென்னை: கிண்டி பாம்பு பண்ணையில் தென்கிழக்கு ஆசிய நாட்டில் இருக்கும் வெள்ளை நிற மலைப்பாம்பு, உமிழும் விஷப்பாம்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.பாம்பு பண்ணை செயல்தலைவர் டாக்டர். பால்ராஜ் கூறியதாவது: கிண்டியில் உள்ள சிறுவர் தேசிய பூங்காவின் அருகில், சென்னை பாம்பு பண்ணை அமைந்துள்ளது. மேலும் கடலில் மட்டுமே காணப்படும் கொடிய விஷத்தன்மை கொண்ட கடல் பாம்புகளும் இங்கு உள்ளது. நில பாம்புகளை விட கொடிய விஷம் கொண்டது. நல்ல பாம்புகளை விட நான்கு முதல் 10 மடங்கு வரை விஷத்தன்மை கடல் பாம்புக்கு அதிகம் உள்ளது.  
இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விமானம் மூலம் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாட்டில் இருக்கக் கூடிய வெள்ளை நிற மலைப்பாம்பு மற்றும்  உமிழும் விஷப் பாம்பு ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இவை 2 மீட்டர் தூரத்துக்கு எதிரிகளின் கண்களை தாக்க கூடிய பாம்பு வகையை சேர்ந்தது. இதையடுத்து இந்த 2 பாம்புகளை பராமரிப்பதற்காக கிண்டி பாம்பு பண்ணையில் ஒப்படைத்தனர். அதை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் பல்வேறு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த பாம்புகள் இந்தியாவில் உள்ள விலங்கு கண்காட்சியில் எங்கேயும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செவ்வாய் வழக்கம் போல் விடுமுறை நாட்கள் ஆகும். ஆனால் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கிண்டி பாம்பு பண்ணை வழக்கம் போல் இயங்கும் என்று பாம்பு பண்ணை செயல்தலைவர் டாக்டர். பால்ராஜ் கூறினார்.

Tags : Kindi Snake Farm ,White Mountain Pyramid , People , white mountain ,pyramid,Kindi Snake Farm, Officials say Tuesday
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் தாவரங்கள்,...