×

விடுமுறை தினத்தையொட்டி பழநியில் பக்தர்கள் குவிந்தனர்: போக்குவரத்து பாதிப்பு

பழநி: விடுமுறை தினத்தின் காரணமாக பழநியில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறை, ஐயப்ப பக்தர்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்களின் வருகையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழநி நகரில் குவிந்தனர். தவிர, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் பழநி கோயிலில் இன்று காலை குவிந்திருந்தனர்.   இதனால் அடிவாரம் மற்றும் கோயில் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு இருந்தது.

மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழநி கோயில் வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பயணம் செய்யும் நிலைமை ஏற்பட்டது. பக்தர்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் பழநி கோயிலின் சுற்றுலா பேருந்து நிலையம், பூங்கா சாலை, கிரிவீதி, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன. இதனால் அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே அடிவாரப் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட வேண்டுமென பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Tags : pilgrims ,holiday ,Palani ,Holidays , Holidays, habits, pilgrims, transportation
× RELATED ஏப்ரல் 2 முதல் தேர்வுகள் தொடக்கம் 1...