×

திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் பரபரப்பு: ஆதினமாக முயன்றவரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் போலி ஆவணங்களை வைத்து மடாதிபதியாக பொறுப்பேற்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயில் கடந்த 7 ஆண்டுகளாக இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் சிதம்பரத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் போலி ஆவணங்களை காண்பித்து கந்தசாமி கோயிலின் ஆதினமாக ஆக முயற்சித்ததாக கூறப்படுகிறது. அத்துமீறி கோவில் மடத்துக்குள் நுழைந்த முத்துக்குமரனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

முத்துக்குமரன் ஆதினமாக பதவி ஏற்க முயற்சிக்க சிதம்பரம் பழையார் மடத்தின் ஆதினம் மவுன சுந்தரமூர்த்தி மற்றும் நடராஜர் கோவில் தீட்சிதர் சிவகுமார் ஆகியோர் உதவியதாக கூறப்படுகிறது. கந்தசாமி கோயிலின் சொத்துக்களை அபகரிக்கவே இது போன்ற முயற்சிகள் நடைபெறுவதாக கூறும் பொதுமக்கள் இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kandaswamy Temple ,public , Kandaswamy Temple, Tiruppore, captive
× RELATED திருப்போரூர் திறந்தநிலையில் கந்தசாமி...