×

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம்: முன்னோட்டமாக அடுத்த ஆண்டு ரோபோவை அனுப்பி சோதனை செய்ய இஸ்ரோ திட்டம்

பெங்களூரு: விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்க்கு முன்னோட்டமாக அடுத்த ஆண்டில் ரோபோவை அனுப்பி சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் விண்வெளி பயணத்தை நோக்கி பணியாற்றி வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அறிவித்துள்ளது. ககன்யான் என்று இந்நிறுவனத்தால் அழைக்கப்படும் இத்திட்டம், 2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோ நிறுவனம் ஏற்கனவே இதற்கான விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ககரின் விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி தொடங்கும்

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு  முன்னோட்டமாக அடுத்த வருட இறுதிக்குள் ரோபோவை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது, இதுகுறித்து திருவனந்தபுரத்தில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ககன்யான் திட்டத்தில் மூன்று வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பூமிக்கு பத்திரமாக கொண்டு வருவதே இலக்கு என்றார். இதற்கு முன்னோட்டமாக ரோபோ அனுப்பும் திட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அடுத்த வருடம் 10 விண்வெளி திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில் சூரியன் குறித்த ஆய்விற்கான ஆதித்யா-எல் 1 திட்டம் சிறப்புமிக்க ஒன்றாக இருக்கும் எனவும் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

Tags : space ,ISRO ,Kagan ,trial , Space, Cagayan Project, Robot, ISRO
× RELATED மனவெளிப் பயணம்