×

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்தி வந்த 1.4 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

கோவை: ஷார்ஜா விமானத்தில் 1.4 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு நேற்று முன்தினம் காலை ஏர் அரேபியா விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பரிசோதித்தனர்.  அப்ேபாது மும்பையை சேர்ந்த ஜவுளி வியாபாரம் செய்யும் ஜூனைத் யூசுப் சேக் (27),  அவரது நண்பரான அசிம் சாஜித் குரோசி (25) ஆகியோர் வைத்திருந்த அட்டை பெட்டியும் பரிசோதிக்கப்பட்டது. டெக்ஸ்டைல்  உதிரிபாகங்களை வைத்து இவர்கள் பெட்டியை கொண்டு வந்திருப்பதாக கூறினர்.

அதிகாரிகள் ஸ்கேன் பரிசோதனை செய்தபோது பெட்டிக்குள் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அட்டை பெட்டியை பிரித்து பார்த்ததில் பேப்பர் போல் மாற்றி தங்க தகடுகள் இருந்தது.  இவற்றின் எடை 1 கிலோ 420 கிராம். இதன் மதிப்பு 56.94 லட்ச ரூபாயாகும்.  இதன்பின், 2 பேரிடமும் விசாரித்தபோது துபாயில் வசிக்கும் ஷாஜித் என்பவர் இந்த அட்டை பெட்டியை கொடுத்து விட்டதாகவும், கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்று குறிப்பிட்ட செல்போன்  எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என தெரிவித்ததாகவும் கூறினர். மேலும், அட்டை பெட்டியை சரியாக ஒப்படைத்தால் குறிப்பிட்ட தொகை பரிசாக தரப்படும் எனகூறி தங்களிடம் கொடுத்து  அனுப்பியதாகவும், இதன்அடிப்படையில் கோவைக்கு வந்ததாகவும் இருவரும் தெரிவித்தனர். இதையடுத்து, தங்க தகடுகளை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags : flight ,Sharjah ,Coimbatore , 1.4kg of gold seized from Sharjah-Coimbatore flight: 2 arrested
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!