×

புதுச்சேரி ஹாட்ரிக் வெற்றி

புதுச்சேரி முதல் போட்டியில் பீகாரை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் சிக்கிமை 269 ரன், இன்னிங்ஸ் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.  இந்நிலையில்  கொல்கத்தாவில் நேற்று முடிந்த 3வது லீக் போட்டியிலும் மிசோரமை  272 ரன், இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது புதுச்சேரி. கவுசிக் காந்தி சதம் தப்பித்த தமிழ்நாடு: இந்தூரில் நடந்த மத்தியபிரதேசம்- தமிழ்நாடு இடையே நடந்த லீக் போட்டி டிராவில் முடிந்துள்ளது. முதல் இன்னிங்சில் தமிழகம் 149, மத்தியபிரதேசம் 333ரன் எடுத்தன. ஏற்கனவே கர்நாடகம், இமாச்சல்  அணிகளிடம் தோற்றிருந்த தமிழகம் மத்தியபிரதேசத்திடமும் தள்ளாடியது.

அதனால் தமிழ்நாடு 2வது இன்னிங்சில் பொறுப்புடன் விளையாடியது. கடைசிநாளான நேற்று கவுசிக் காந்தி விளாசிய 154 ரன்னால் தமிழகம் தலைநிமிர்ந்தது. கூடவே  ஜெகதீசன் 54, முகுந்த் 52, கேப்டன் அபரஜித் 39 கை கொடுக்க தமிழ்நாடு 7 விக்கெட் இழப்புக்கு 377 ரன் எடுத்தது. அத்துடன் ஆட்ட நேரமும் முடிய போட்டி டிராவானது. முதல் இன்னிங்ஸ் முன்னிலை காரணமாக மத்தியபிரதேசத்துக்கு 3  புள்ளியும், தமிழகத்துக்கு ஒரு புள்ளியும் கிடைத்தது.

Tags : Puducherry , Puducherry hat trick win
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது