×

வன்முறை சேதங்களை மதிப்பிட குழு அமைப்பு

முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களின்போது நடந்த வன்முறைச் சம்பவங்களில் முசாபர்நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பல மாவட்டங்களில் கடும் வன்முறையும் ஏற்பட்டது. இதில் பலர் இறந்தனர்.

இந்நிலையில், முசாபர்நகரில் வன்முறையில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட மாவட்ட நிரவாகம் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கூடுதல் துணைக் கலெக்டர் அமித் சிங் கூறுகையில், ‘‘சேதங்கள் மதிப் பிடும்  பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இதற்கு காரணமானவர்களை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது. இதுவரையில் தங்களுடைய சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக 25 புகார்கள் வந்துள்ளன. இதற்கு  காரணமானவர்களை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.



Tags : Group organization , Group organization to assess violent casualties
× RELATED மிக்ஜாம் புயல் எதிரொலி: தொண்டு...