×

நாகர்கோவில்-சென்ட்ரலுக்கு சிறப்பு கட்டண ரயில்

சென்னை: நாகர்கோவில்- சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சிறப்பு கட்டண ரயில் நாகர்கோவில்- சென்ட்ரல் இடையே (ரயில் எண் 06004) இன்று பிற்பகல் 2.45மணிக்கு புறப்பட்டு வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி,  திருச்சி, கரூர், நாமக்கல், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு 30ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு வந்தடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Nagercoil ,Central , Special fares, train , Nagercoil-Central
× RELATED நாகர்கோவில் அரசு பொறியியல்...