×

ஜி.கே.வாசன் 56வது பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சியினர் கொண்டாடினர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தனது 56வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். அப்போது ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். தென்சென்னை கிழக்கு மாவட்ட தமாகா சார்பில் மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை மூத்த துணை தலைவர் ஞானதேசிகன் வழங்கினார். மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயிலில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தென்சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சைதை மனோகரன் தலைமையில் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் வடபழனி முருகன் கோயிலில் ஞானதேசிகன் முன்னிலையில் தங்கத் தேர் இழுக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வடசென்னை கிழக்கு மாவட்ட தமாகா சார்பில் மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ தலைமையில் ஓட்டேரி பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதையடுத்து ஏழைகளுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நேற்று மதியம் திரு.வி.க.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோன்று ஆவடி அடுத்த பட்டாபிராம் நாகவள்ளி அம்மன் ஆலயத்தில் தமாகா மாவட்ட தலைவர் விக்டரி மோகன் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதேபோன்று பல்வேறு இடங்களில் தமாகாவினர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நடத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.

Tags : GK Vasan ,party celebration , GK Vasan, 56th birthday, welfare assistance, party celebration
× RELATED தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை...