×

மாவட்ட பதிவாளர் எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் எங்கு வேண்டுமானாலும் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை: பதிவுத்துறை ஐஜி பரிந்துரை: சட்டத்திருத்தம் செய்யப்படுமா?

சென்னை: மாவட்ட பதிவாளர் எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் எங்கு வேண்டுமானாலும் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர பதிவுத்துறை ஐஜி அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் பத்திரங்கள் அந்தெந்த சார்பதிவாளர் எல்லைக்குள் இருக்க வேண்டும். அப்போது தான் பத்திரம் பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், வெளியூர்களில் வசித்து வரும் பொதுமக்கள் பத்திரம் பதிவு செய்ய அந்த சொத்து எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. மேலும், முக்கிய சார்பதிவாளர் அலுவலகங்களில் எப்போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பத்திரம் பதிவு செய்ய பொதுமக்கள் வந்து காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளது.

இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து அப்போது பதிவுத்துறை ஐஜியாக இருந்த குமரகுருபரன் ஒரு மாவட்ட பதிவாளர்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்துக்கள் இருந்தால் எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் வேண்டுமென்றாலும் பதிவு செய்து கொள்ளும் புதிய நடைமுறை கொண்டு வருவது தொடர்பாக சட்ட திருத்தம் செய்யக்கோரி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். ஆனால், தற்போது வரை இந்த சட்டத்திருத்ததுக்கு தமிழக அரசு சார்பில் ஒப்புதல் தரப்படவில்லை. இதனால், சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, மாவட்ட பதிவாளர்கள் எல்லைக்குட்பட்டு 10 முதல் 20 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இந்த மாவட்டபதிவாளர் அலுவலக கட்டுபாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலக எல்லையில் சொத்து இருந்தாலும், அந்த மாவட்ட பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் எங்கு வேண்டுமென்றாலும் சொத்துக்களை பதிவு செய்யலாம் என்ற நடைமுறை கொண்டு வரும் பட்சத்தில் அந்த அலுவலகத்தில் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், கூட்டம் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் பத்திரம் பதிவுக்காக காத்து இருப்பதை தவிர்க்க முடியும். அரசு சார்பில் விரைவில் இந்த சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் தரும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

Tags : anywhere ,District Registrar ,Delegation ,Bureau ,Delegation offices , Assets are registered , District Registrar , Delegation offices wherever required
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...