×

ஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல்

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் முதன்மையான தேர்வாக இருக்கிறது. தற்போது ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல் மட்டும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வந்துள்ளது. இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த கார், எஸ்வி, வி, விஎக்ஸ், இசட்எக்ஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.  அதேநேரத்தில், பிஎஸ்-6 டீசல் மாடல், வரும் ஏப்ரல் மாதத்தையொட்டி விற்பனைக்கு கொண்டுவரப்படும் என ஹோண்டா அறிவித்துள்ளது. பிஎஸ்-4 மாடல் தொடர்ந்து சில மாதங்கள் விற்பனையில் இருக்கும் நிலையில் விலை ₹5,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ளடீசல் மாடலில் 1.5 லிட்டர் ஐடிடெக் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இந்த இன்ஜின், ஒரு சில மாதங்களில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக கிடைக்கும்.

இந்த காரில், 7.0 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும். வாய்ஸ் கமாண்ட், நேவிகேஷன், புளூடூத் வசதிகளும் உள்ளன. அடுத்த ஆண்டு மத்தியில், இப்புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. சமீபத்தில், தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இப்புதிய மாடல், வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் மாறுபட்ட மாடலாக இருக்கிறது. அத்துடன், பிஎஸ்-6 இன்ஜின் தேர்வுகள் வருவதுடன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த காரின், பிஎஸ்-6 பெட்ரோல் மாடலுக்கு வேரியண்ட்டை பொறுத்து 9.91 லட்சம் முதல் 14.31 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-4 பெட்ரோல் மாடலைவிட பிஎஸ்-6 பெட்ரோல் மாடலின் விலை 15,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

Tags : City ,PS ,Honda , Honda City ,PS-6 petrol model
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...