×

காங்கிரஸ் 135வது நிறுவன நாள் கொண்டாட்டம் ஹிட்லரை போல் மோடி நடவடிக்கை உள்ளது : கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை: ஹிட்லர் நடவடிக்கையை போல் மோடி நடவடிக்கை உள்ளது என்று  காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று காங்கிரஸ் கட்சியின் 135வது ஆண்டு நிறுவன நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். இதில் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, பொருளாளார் நா.சே.ராமச்சந்திரன், கோபண்ணா, சிரஞ்சீவி, வக்கீல் செல்வம், தாமோதரன், ரங்கபாஷ்யம், மாவட்ட தலைவர்கள்  எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், அரும்பாக்கம் க.வீரபாண்டியன், நாஞ்சில் பிரசாத், மயிலை தரணி, எம்.பி.ரஞ்சன்குமார், திருவான்மியூர் மனோகரன், டெல்லிபாபு, எஸ்.கே.நவாஸ், கடல் தமிழ்வாணன், ஹசன் அருண் உட்பட பலர் கலந்து ெகாண்டனர். கே.எஸ்.அழகிரி கட்சி கொடியினை ஏற்றி வைத்து பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் 135வது நிறுவன நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் ஆபத்தானது. இந்தியாவில் உள்ள ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

வரி அமைப்பிலும் ஒரே விதமான ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஜிஎஸ்டியை காங்கிரஸ் கொண்டு வந்தது. பாஜக ஜிஎஸ்டி கொண்டு வரும்போது சில திருத்தங்களுடன் நாங்கள் ஆதரித்தோம். ஆனால் அவர்களின் ஜிஎஸ்டி குழப்பமானது, தவறானது. உச்சகட்ட வரி விதிப்பு 18 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது என்பது காங்கிரஸ் கொண்டு வந்த ஜி.எஸ்.டி. தொடர்ந்து தோல்வி ஏற்பட்டதை அடுத்து படிப்படியாக ஜிஎஸ்டியை பாஜக குறைத்து வருகிறது. காங்கிரஸ், பாஜகவும் ஒரே கருத்துடைய கட்சிகள் அல்ல. காங்கிரஸ் என்பது பரந்த நோக்கம் உடையது. பாஜக குறுகிய நோக்கம் உடையது. ராகுல் காந்தி தலைவராக வர வேண்டும் என்பது தான் காங்கிரஸ் கட்சியினரின் எண்ணம். ஹிட்லர் நடவடிக்கை போன்று மோடி நடவடிக்கை உள்ளது. எடப்பாடியும் ஹிட்லர் மோடியின் ஆள் தான். அதனால் தான் விடுமுறை தினம் அன்று மோடியின் உரையை கேட்க பள்ளிக்கு வரச்சொல்கிறார்கள். அவ்வாறு வந்தாலும் அவர்களின் எண்ணம் மோடியின் பேச்சை கேட்பதில் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : celebration ,KS Alagiri ,Congress ,Modi ,speech ,Hitler , Modi's action, Hitler, Congress' 135th anniversary celebration,KS Alagiri speech
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்