×

ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று ஜார்கண்ட் பயணம்

சென்னை: ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை ராஞ்சி புறப்பட்டு செல்கிறார். ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து ஜார்கண்ட்புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்பு விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் ராஞ்சியில் இருக்கும் மோஹ்ராபதி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  ஹேமந்த் சோரன் பேசினார். அப்போது பதவியேற்வு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். முதல்வராக பதவியேற்கும் ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின் பதவி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக அறிவித்தார். அதன்படி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஞ்சி புறப்பட்டு செல்கிறார். பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் மு.க.ஸ்டாலின் இன்று இரவே சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

Tags : Jharkhand ,MK Stalin ,Hemant Soren , MK Stalin visits Jharkhand , attend Hemant Soren's swearing-in
× RELATED ஹேமந்த் சோரனுக்கு எதிராக டிவி, பிரிட்ஜ் வாங்கிய ரசீதை ஆதாரமாக காட்டிய ஈடி