×

தண்ணீரை சேமித்து வைக்க பிளாஸ்டிக் கிணறு: ஊட்டியில் அதிகரிப்பு

ஊட்டி: தண்ணீரை மிச்சப்படுத்தும் பிளாஸ்டிக்கு கிணறுகளை ஊட்டியில் தற்போது அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் அமைத்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் ஜூன் மாதம் துவங்கும் பருவமழை பெரும்பாலும், 6 மாதங்கள் ெபய்யும். இந்த ஆண்டு குறித்த சமயத்தில் பருவ மழை கொட்டி தீர்த்தது. ஆனால், தற்போது நீர்பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. ேமலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும், இரவில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இதுபோன்ற சமயங்களில் நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து அதனை ஸ்பிரிங்கலர் மூலம் விவசாய நிலங்களுக்கு பாய்ச்சப்படுகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி தோட்டங்களுக்கு இம்முறை நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்து வருகிறது. இதற்கு எப்போதும் விவசாய நிலங்களில் தண்ணீர் இருக்க வேண்டியுள்ளது. ஆனால், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள கிணறுகளில் போதுமான தண்ணீர் இருப்பதில்லை. மேலும், சேமித்தும் வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரும்பாலான விவசாய நிலங்களில் தற்போது பிளாஸ்டிக் கிணறுகள் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் அதிகளவு இந்த பிளாஸ்டிக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி அருகேயுள்ள புதுமந்து, குளிச்சோலை, ஆடாசோலை, காந்திநகர் போன்ற பகுதிகளில் தற்போது மேடான பகுதிகளில் விவசாய நிலங்களின் நடுவே பிளாஸ்டிக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் பகல் நேரங்களில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

தற்போது நீர் பனி கொட்டி வரும் நிலையில், பயிர்கள் பாதிக்காமல் இருக்க தண்ணீர் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சப்படும் நிலையில், இந்த பிளாஸ்டிக் கிணறுகள் விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது.

Tags : well , Plastic well, Ooty
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை