×

ஏடிஎம் மோசடிகளை தடுக்க ஜன. 1 முதல் புது நடைமுறை: எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அறிவிப்பு

புதுடெல்லி: ஏடிஎம்களில் இரவு நேரங்களில் ஏற்படும் மோசடிகளைத் தடுக்க எஸ்பிஐ வங்கி புதிய முறையை வரும் ஜன. 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. நாட்டில் ஏடிஎம் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதால், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மோசடி கும்பலிடம் இருந்து பாதுகாக்க பல்வேறு வழிகளை அறிமுகப்படுத்துகின்றன. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சமீபத்தில் ஒரு ட்வீட் மூலம் தனது ஏடிஎம்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் முறையை அறிமுகப்படுத்தப்போவதாகக் கூறியது.

அதாவது, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ரூ.10,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்ய இந்த வசதி கிடைக்கும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது. இத்திட்டம், 2020 ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் அமல்படுத்தப்படும். அதாவது, ஏடிஎம்மில் பணம் திரும்பப் பெறும் பணியைத் தொடங்கும் நேரத்தில் எஸ்பிஐ கார்டுதாரர்கள் எஸ்பிஐ வங்கியில் பதிவுசெய்த மொபைல் எண்ணில் ஓடிபி பெறுவார்கள்.  ஓடிபி என்பது ஒரு ஒற்றை பரிவர்த்தனைக்கு பயனரை அங்கீகரிக்கும் எழுத்துக்குறிகளின் அமைப்பு உருவாக்கிய எண்.

எஸ்பிஐ ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்களை அங்கீகரிக்கப்படாத ஏடிஎம் பணத்தை பெறுவதிலிருந்து பாதுகாக்கும். இந்த முறையானது எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே  செயல்படும். எஸ்பிஐ அல்லாத வேறு வங்கிக் கிளை ஏடிஎம்களில் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ATM , ATM fraud, SBI bank management
× RELATED வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம்...