×

சோமாலியாவில் பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: 70 பேர் பலி... மேலும் பலர் படுகாயம்

மொகாதிஷு:கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிகழ்த்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 பேர் அதிகரித்துள்ளது. 1991ல் இருந்து சோமாலியா நாடு வன்முறை மோதல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-ஷபாப் தீவிரவாதம் இயக்கம்  நடத்திய கார் குண்டுகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் தலைநகர் தொடர்ந்து சீர்குலைந்து வருகிறது. அல்-ஷபாப்  2011ல் சோமாலிய தலைநகரிலிருந்து வெளியேற்றப்பட்டது. ஆனால் கிராமப்புறங்களின் சில பகுதிகளை இன்னும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்துள்ளது. அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு, தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

குறிப்பாக சோதனைச் சாவடிகள், ஓட்டல்கள் மற்றும் கடலோர பகுதிகளை குறிவைத்து இந்த  தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், மொகடிஷூவில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் உள்ள வரி செலுத்தும் மையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அந்த பகுதி முழுவதுமே கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த கோர தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகாரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. எனினும், அல்ஷபாப் அமைப்பு இந்த  தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Tags : car bombing ,Somalia , Somalia, terrorists, car bomb, attack
× RELATED கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: கைது...