×

வாக்கு சேகரிக்க அனுமதிக்காததை கண்டித்து உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்: தர்மபுரி அருகே பரபரப்பு

கடத்தூர்: கடத்தூர் அருகே வெங்கடதாரஅள்ளியை சேர்ந்த வேட்பாளர்களை, வெ.புதூர் பகுதியில் வாக்கு சேகரிக்க அனுமதிக்காததை கண்டித்து, நேற்று அப்பகுதியை ேசர்ந்த மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  கடத்தூர் அருகே உள்ள வெங்கடதாரஅள்ளி கிராமத்தில், ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிக்கு வெங்கடதாரஅள்ளியை சேர்ந்த சரவணன் என்பவர் சுயேட்சையாகவும், வெ.புதூர் பகுதியை சேர்ந்த பாமக சார்பில் சக்திவேல் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி, சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் ராஜிவ்காந்தி ஆகிய இருவரும், ஆதரவாளர்களுடன் வெ.புதூர் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர். இதுகுறித்து சரணவன், ராஜிவ்காந்தி ஆகிய இருவரும், கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து புகார் கொடுத்தனர்.

இந்நிலையில், ேநற்று வெங்கடதாரஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில், வெங்கடதாரஅள்ளியை சேர்ந்த மக்கள் யாரும் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். மேலும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஊரின் நடுவில் உள்ள மாரியம்மன் கோயிலில் திரண்டனர். மாலை 5மணி வரை மொத்தம் 16பேர் மட்டுமே வாக்களித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, வெங்கடதாரஅள்ளி கிராமத்திற்கு ேநரில் சென்றார். பின்னர், வேட்பாளர்களான சரணவன், ராஜிவ்காந்தி  மற்றும் ஊர் பொதுமக்களிடம் ேபச்சு வார்த்தை நடத்தினார். இந்த ேபச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததால், வெங்கடதாரஅள்ளி பகுதியை மக்கள் தேர்தலை முற்றிலும் புறக்கணித்தனர்.  இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `ஊராட்சி மன்ற தேர்தலில் எங்கள் கிராம மக்கள், வெ.புதூர் பகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 60ஆண்டு காலமாக வாக்கு சேகரிக்க முடியாத நிலை நீடிக்கிறது. இந்த நிலை தொடராமல் இருக்க, இந்த தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம்,’ என்றனர்.



Tags : elections ,Parambaram ,Dharmapuri Villagers ,Dharmapuri , Voting, Local Elections, Village People, Dharmapuri
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு