×

நார்த்தம்பட்டியில் குப்பை கொட்டுமிடமாக மாறிய பொதுக்கிணறு

தர்மபுரி: தர்மபுரி அருகே, பொதுக்கிணறை தூர்வாரி, இரும்பு கேட் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லம்பள்ளி ஒன்றியம் நார்த்தம்பட்டியில், சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நல்லம்பள்ளி மெயின்ரோடு அருகே பொதுக்கிணற்றில் எப்போதும் தண்ணீர் வற்றாமல் இருக்கும். இந்நிலையில் முறையாக பராமரிக்காததால், கிணற்றில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர்.

இதனால், கிணற்றில் தண்ணீர் எடுப்பதும் படிப்படியாக குறைந்துவிட்டது. தற்போது குப்பையும், கூளமுமாக கிடக்கும் இந்த கிணற்றை தூர்வாரி, குப்பை கொட்டுவதை தடுக்க இரும்பு கேட் அமைத்து பாதுகாக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நார்த்தம்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Northumbria , Northampton, trash, common denominator
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்...