×

தண்ணீரை சேமித்து வைக்கும் பிளாஸ்டிக் கிணறு பயன்பாடு அதிகரிப்பு

ஊட்டி : தண்ணீரை மிச்சப்படுத்தும் பிளாஸ்டிக்கு கிணறுகளை தற்போது அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் அமைத்து வருகினற்னர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலை மாவட்டமான நீலகிரியில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் பெய்யும். பெரும்பாலும், 6 மாதங்களுக்கு நீலகிரியில் மழை பெய்யும். இம்முறை குறித்த சமயத்தில் இரு பருவ மழையும் துவங்கி கொட்டி தீர்த்தது.

ஆனால், தற்போது நீர் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.மேலும் , பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும், இரவில் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது போன்ற சமயங்களில் நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து அதனை ஸ்பிரிங்கலர் மூலம் விவசாய நிலங்களுக்கு பாய்ச்சப்படுகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி தோட்டங்களுக்கு இம்முறை நாள்தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணி நடந்து வருகிறது.  இதற்கு எப்போதும் விவசாய நிலங்களில் தண்ணீர் இருக்க வேண்டியுள்ளது.

ஆனால், மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள கிணறுகளில் போதுமான தண்ணீர் இருப்பதில்லை. மேலும், சேமித்தும் வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான விவசாய நிலங்களில் தற்போது கிணறுகள் அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் அதிகளவு இந்த பிளாஸ்டிக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி அருகேயுள்ள புதுமந்து, குளிச்சோலை, ஆடாசோலை, காந்திநகர் போன்ற பகுதிகளில் தற்போது மேடான பகுதிகளில் விவசாய நிலங்களின் நடுவே பிளாஸ்டிக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் மைக்ரோ ஸ்பிரிங்லர் மூலம் பகல் நேரங்களில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது நீர் பனி கொட்டி வரும் நிலையில், பயிர்கள் பாதிக்காமல் இருக்க தண்ணீர் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சப்படும் நிலையில், இந்த பிளாஸ்டிக் கிணறுகள் விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது.

Tags : ooty,Plastic Well,save water ,neelagiri
× RELATED தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ம் தேதி...