×

பெரியதாக அமைக்காமல் பெருமைக்காக வைப்பதா? ‘அல்லுக்கூடம் அளவு பத்தலையே...’ அல்லல்பட்டு வரும் நெசவாளர்கள்

*வீதிகில் பணியாற்றி வரும் கொடுமை
* விரைந்து நடவடிக்கை எடுக்குமா அரசு?

பரமக்குடி  : பரமக்குடி நெசவாளர்களின் நீன்டகால கோரிக்கையான அல்லுக்கூடத்தை சிறியதாக அமைத்ததால், நெசவாளர்கள் வீதிகளில் பணியாற்றும் நிலையை ஏற்பட்டுள்ளதாக புலம்பி தவிக்கின்றனர். பரமக்குடி பெருமாள் கோவில், சின்னகடை, கிருஷ்ணா தியேட்டர், காகா தோப்பு, எமனேஸ்வரம், குமரக்குடி, சோமநாதபுரம் மற்றும் சத்தியமூர்த்தி காலனி  உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பட்டு சேலைகள் காஞ்சிபுரம் பட்டு சேலைகளுக்கு நிகரானதாக கூறப்படுகிறது. எனவே, கைத்தறி நெசவாளர்கள் பயன் பெறும் வகையில் அல்லுக்கூடம் அமைக்க வேண்டும் என பரமக்குடி பகுதி நெசவாளர்கள் நீண்ட காலமாக கூறி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு பரமக்குடி நகராட்சி சார்பாக 11வது வார்டில், சிறுவர்கள் பூங்கா கட்ட தீர்மானித்த இடத்தில் அல்லுக்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால், அல்லு நீட்டுவதற்கு  போதுமான நீளம் இல்லாததால் நெசவாளர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அல்லுக்கூடம் உள்ளது. இதனால் பரமக்குடியில் நெசவாளர்கள் தாங்கள் வசிக்கும் தெருக்களில்  அல்லு நீட்டும் கொடுமை அன்றாடம் நடந்து வருகிறது. தெருக்களில் அல்லு நீட்ட கம்பி மற்றும் கம்புகளை ஊன்றுவதால் சாலைகள் சேதமடைகின்றன.

 இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. மழை பெய்தால் பணியை தொடர முடியாது. மேலும், பலத்த காற்று காலங்களில் நூல்கள் சேதமடைகின்றன. இதனால் நெசவாளர்கள் கடும் அவதியடைகின்றனர். இதுகுறித்து பெருமாள் கோயில் பகுதியை சார்ந்த ராமசாமி கூறும்போது, ‘‘பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள அல்லுக்கூடம் நீளம் குறைவாக உள்ளதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் தெருக்களில் அல்லுநீட்டி வருவதால் மழைக்காலங்களில் வேலை செய்ய முடியவில்லை. இதனால் குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியுள்ளது. மழை, வெயில், காற்று ஆகிவற்றிலிருந்து காக்கும் விதமாக மின்சாரவசதியுடன் சேலை உற்பத்திக்கு அல்லு நீட்ட பெரிய அளவில் அல்லுக்கூடத்தை அரசு அமைக்க வேண்டும். தொகுதி எம்எல்ஏ எங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : hull ,government ,Weavers , paramakudi ,Weavers ,space ,government
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்