×

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு : குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக நடவடிக்கை

லக்னோ : குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் போராட்டத்தின் போது அலிகர் முஸ்லிம் பல்கலை கழக மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறியது.இதை தொடர்ந்து மத்திய அரசு இரு அவையிலும் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது.இதை தொடர்ந்து  நாடு முழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது.  உத்திரபிரதேசம் ,டெல்லி உள்ளிட்ட  மாநிலங்களில் போராட்டம்  தீவிரம் அடைந்து உள்ளது. நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிலும் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜாமியா கல்லூரி மாணவர்கள் மற்றும் லிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடந்த 15ம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த போலீசார் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அத்துடன் வருகின்ற ஜனவரி 5ம் தேதி வரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட  போராடட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 10,000 அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மணிலா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

Tags : Aligarh Muslim University ,Liker Muslim University , Citizenship, Students, Aligarh Muslim, University, Case Record
× RELATED காங்கிரசில் இருந்து விலகி வந்த அனில்...