×

வங்கிகளின் வாராக் கடன் 2020 செப்டம்பரில் 9.9% ஆக உயரும் :ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

மும்பை : வங்கிகளின் வாராக் கடன் 2020 செப்டம்பரில் 9.9% ஆக உயரும் என்று ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வங்கிகளின் இருப்பு மதிப்பில் பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது.பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தையில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள் வங்கிகளை பாதிக்கும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. வங்கிகள் கடன் வழங்கும் திட்டத்தில் தேக்கம் காணப்படுவதால் வாராக்கடன் மதிப்பு அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

2019 செப்டம்பரில் 9.3 என்று இருந்த வாராக்கடன் 2020 செப்டம்பரில் 9.9% ஆக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தனியார் வங்கிகளும் நிர்வாகத்தை சீர் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது. பொருளாதாரத்தில் தேவை குறைந்து வருவதால் 2020 மார்ச் காலாண்டில் பொருளாதாரம் தேக்கம் அடையும் என்று ரிசர்வ வங்கி கூறியுள்ளது.10 லட்சம் ரூபாய் வாராக்கடனில் தத்தளிக்கும் தேசிய வங்கிகளுக்கு புத்துயிர் ஊட்ட மறு முதலீட்டுக்காக 2 லட்சத்துக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயை ஏற்கனவே மத்திய அரசு வழங்கியுள்ளது.


Tags : RBI Report Bank , Warlock Credit, Reserve Bank, Thesis, Economics
× RELATED ஏப்-29: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.