×

நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம்...இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு விடைபெறுகிறது 2019.! : டிடிவி தினகரன் விமர்சனம்

சென்னை : மத்திய பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி நல்லாட்சிக்கான குறியீட்டுக் கூட்டுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, விவசாயம், தொழில்  ஆகிய துறைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  

இதுகுறித்து பெருமிதம் தெரிவித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “மத்திய அரசின் விருதுகளால் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அனைத்து துறையிலும் இந்தியாவிலேயே முதல் நிலை வகித்து கொண்டிருப்பது நாட்டு மக்களுக்கு தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.பொது நிர்வாகத்தில் முதலிடம் வகிப்பது தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதை கிண்டல் செய்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம். இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு நம்மிடம் இருந்து விடைபெறுகிறது 2019-ம் ஆண்டு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Tags : Tamil Nadu , Central Labor Department, Good Governance, TTV Dinakaran
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...