×

தேசத் துரோக வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை எதிர்த்து முஷாரப் அப்பீல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், கடந்த 1999ம் ஆண்டு புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். அவர், கடந்த 2007ம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது, தனக்கு எதிரான நீதிபதிகளையும், அரசியல் தலைவர்களையும் சிறையில் அடைத்தார். பின்னர், 2008ல் அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், 2013ல் முஷாரப் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. 6 ஆண்டு விசாரணைக்கு பின் இந்த வழக்கில், முஷாரப்புக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது. துபாயில் தஞ்சம் அடைந்துள்ள 76 வயது முஷாரப், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் படுத்த படுக்கையாகி தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது தரப்பில் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 2020, ஜனவரி 9ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Musharraf , Musharraf Appeal, Treason Trial
× RELATED தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான்...