×

உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்க வேட்பாளர்கள் முன்னிலையில் தான் வாக்கு பெட்டியை பிரிக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முகமது பாரூக் மாநில தேர்தல் ஆணையரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது. தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் வருகிற 30ம் தேதி நடக்கிறது. வாக்கு  எண்ணிக்கை ஜனவரி 2 அன்று நடைபெற உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு பதிவின் போது ஒரு வாக்குச்சாவடியில்  அனைத்து பதவிகளுக்கான வாக்குச் சீட்டுகளையும் பதிவு செய்து ஒரே வாக்கு பெட்டியில் வாக்காளர்கள் செலுத்தினர். அதனால் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டியை திறக்காமல் உள் அரங்கில் அதிகாரிகளே வாக்கு பெட்டிகளை பிரித்து ஒவ்வொரு பதவிகளுக்கான வாக்குகளை பிரித்து வெளியில் கொண்டு வந்தனர்.

அதன் மூலம் வாக்கு எண்ணிக்கையின் போது மாநிலம் முழுவதும் அதிகமான முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோன்ற முறைகேடு குற்றச்சாட்டு மீண்டும் எழாத வகையில், வேட்பாளர்கள் முன்னிலையிலேயே வாக்குப் பெட்டி மற்றும் பதவிகளுக்கான வாக்குகளை பிரித்து வாக்கு எண்ணிக்கையை நடத்த  உத்தரவிட வேண்டும்.



Tags : elections ,party ,SDBI ,SDPI , Local elections, irregularities, candidates contesting, SDBI
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...